குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் யாழ் மக்கள்

மக்கள் சக்தி: குடிநீர், போக்குவரத்து, வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் யாழ்ப்பாண மக்கள்

by Staff Writer 14-09-2018 | 10:34 PM
Colombo (News 1st) வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் யாழ். மாவட்டத்தில் இன்று தமது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதனையடுத்து, புளியங்குடல் பகுதிக்கு சென்றனர். இங்குள்ள மக்கள் சுத்தமான குடிநீர் இன்றியும் போக்குவரத்து மார்க்கம் இன்றியும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். தொடர்ந்தும் நெளுஞ்சி முனை பகுதிக்கு சென்ற மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டக்குழுவினர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். குடிநீர்த் தட்டுப்பாட்டினால் குடிநீரை பணம் செலுத்தியே பெற்றுக்கொள்வதாக மக்கள் தெரிவித்தனர். அத்துமீறிய இந்திய ட்ரோலர் படகுகளால் தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிப்படைந்துள்ளதாக பருத்தித்துறை - அடைப்பு பகுதி மீனவர்கள் கவலை வெளியிட்டனர். மண்டைத்தீவிற்கும் மக்கள் சக்தி திட்டக்குழுவினர் விஜயம் மேற்கொண்டிருந்தனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் மற்றுமொரு குழுவினர் தாழைத்துறைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். 350-இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த மீனவக் கிராம மக்கள் கடலரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடி தொழில்சார் பல்வேறு இன்னல்களுக்கும் இந்தபகுதி மீனவர்கள் முகம் கொடுத்துள்ளனர். தூண்காலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட நியூஸ்ஃபெஸ்ட் குழாத்தினர் அங்குள்ள வீதிப் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தினர். திருலிங்கபுரம் பகுதியில் போக்குவரத்து வசதிகள் இன்றி பாடசாலை மாணவர்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.