எரிபொருள் கசிவு தொடர்பில் விசாரிக்கப்படவுள்ளது

எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு: விசாரணைக்குழு நியமிக்கப்படவுள்ளது

by Staff Writer 14-09-2018 | 4:25 PM
Colombo (News 1st)  முத்துராஜவெல எரிபொருள் களஞ்சியத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. பல்வேறு நிறுவனங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளை விசேட குழுவில் நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட குழுவின் அறிக்கையை 2 வாரங்களுக்குள் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எண்ணெய் கலந்ததில் பாதிக்கப்பட்ட கடற்பிராந்தியங்களை துப்புரவு செய்யும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடலில் கலந்துள்ள எண்ணெயில் 70 வீதமானவை அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட உஸ்வெடகெய்யாவ முதல் பமுணுகம வரையான கடற்பிராந்தியங்கள் பாவனைக்கு உகந்ததல்ல எனவும் சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.