புதிய பாடகரைத் தேடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

புதிய பாடகரைத் தேடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

புதிய பாடகரைத் தேடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2018 | 6:17 pm

பல ‘சுப்பர் ஹிட்’ பாடல்களைக் கொடுத்த முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் புதிய பாடகரைத் தேடி வருகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

இசை மற்றும் பாடுவதில் ஆர்வமுடையவர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

உங்களிடம் இசைக்கான பேரார்வம் உள்ளதா? அப்படியானால், நீங்கள் மேடையேற இதுவே சரியான தருணம். நான் நல்லதொரு நட்சத்திரப் பாடகரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்; அது நீங்கள் என்றால், உங்கள் விபரங்களை இங்கே தெரிவிக்கவும்

என குறிப்பிட்டு, அதற்கான வழிமுறைகளையும் பதிவிட்டுள்ளார்.

இதனை தங்களுக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாக எண்ணி பலரும் தங்களின் தகவல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்