உயிர் வலி: தாவரங்கள் காயமடைந்தால் எதிர்வினை காட்டும் (Videos)

உயிர் வலி: தாவரங்கள் காயமடைந்தால் எதிர்வினை காட்டும் (Videos)

உயிர் வலி: தாவரங்கள் காயமடைந்தால் எதிர்வினை காட்டும் (Videos)

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2018 | 5:43 pm

உயிரினங்கள் போன்றே தாவரங்கள் காயமடைந்தால் ஒரு அற்புதமான எதிர்வினையைக் காட்டுகின்றன.

தாவரங்கள் ஒரு பாகத்திலிருந்து மற்ற பாகங்களுக்கு உணர்ச்சியை அறிவிக்கின்றன. தாவரங்களுக்கு நம்மைப் போல் நரம்புகள் இல்லை. எனினும், உணர்ச்சியை அறிவிக்க, தாவரங்களில் உள்ள சில உயிரணுக்கள் பயன்படுகின்றன.

ஒரு பூச்சி மூலம் அல்லது மின்சாரத்தால் தாவரங்கள் தாக்கப்படுகையில் அவைகளின் பாதுகாப்பு அமைப்புகள் பிற பகுதிகளுக்கு அறிவிக்கின்றன.

புதிய ஆராய்ச்சி படி, விலங்குகள் போல் தாவரங்கள் தங்கள் நரம்பு மண்டலத்தில் உள்ள அதே சமிக்ஞை மூலக்கூறுகளை பயன்படுத்துகின்றன. ஆனால், தாவரங்களில் நரம்புகள் இல்லை, பிறகு எப்படி இவ்வாறு செய்ய முடிகிறது?

ஆராய்ச்சியாளர்கள் ஃப்ளூரொரெசென்ட் புரோட்டனைப் பயன்படுத்தி இதனைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு தாக்குதலில் பதிலளிப்பதன் மூலம் அலைகள் வழியாக பயணிக்கும்போது அதன் அறிகுறிகளை கீழுள்ள காணொளிகளில் கவனியுங்கள்.

இது குறித்து விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழக தாவரவியலாளர் சைமன் கில்ராய் பின்வருமாறு கூறியுள்ளார்.

இந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்கள் தூண்டப்படுகின்றன. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அல்லது மின்சாரத்தால் பாதிப்பு அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது.

நம் உடலில் இரத்தம் ஓடுவது போலவே, ‘தாவரச் சாறு’ (Sap -சாப்) என்னும் ஒருவகைச் சாறு தாவரங்களின் உடல்முழுவதும் வியாபித்துள்ளது. இந்தத் தாவரச் சாற்றை, தாவர உயிரணுக்கள் தாவரத்தின் உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றன. விலங்குகளால் தாவரங்களுக்கு ஏற்படும் காயங்களைத் தாவரங்களிலுள்ள, ‘புண்திசு’ (Layers of Wound Tissue) என்னும் அடுக்கு காக்கிறது. மொத்தத்தில், தாவரங்கள் நம்மைப் போல வாழ்கின்றன என்பதால், அவற்றுக்கும் உயிர் உண்டு.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்