புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 13-09-2018 | 6:34 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும், சில விடயங்களில் தாமதம் நிலவுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 02. அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (12) வாசிக்கப்பட்டது. 03. வலப்பனை - மகாஊவ எனும் கிராமத்தில், பல்கலைக்கழக அனுமதி பெற்று தோட்டத்தொழிலாளித் தாயொருவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த மகளின் பல்கலைக்கழகத்திற்கான கடிதம் தாமதமானதால் அவரது கனவு கேள்விக்குறியாகியுள்ளது. 04. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் வேட்பாளராகக் களமிறங்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 05. மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான தகவல்களை நீதவான் நீதிமன்ற பதிவாளரூடாக வௌியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. பிரேஸிலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva) விலகியுள்ளார். 02. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் இனியும் அரசியல் நடத்தக்கூடாது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பான வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹொங்கொங் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டுள்ளது.