சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் விடுதலை

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் மொஹமட் சித்திக் உள்ளிட்ட ஐவர் விடுதலை

by Staff Writer 13-09-2018 | 3:49 PM
Colombo (News 1st)  சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் மொஹமட் சித்திக் உள்ளிட்ட 05 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இவர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்யும் போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு குறித்து அப்போதைய பொலிஸ் அத்தியட்சகரான பிரியந்த ஜயக்கொடி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தரான ரங்கன கமகே ஆகியோர் வழங்கிய சாட்சியம் ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்பட்டமையால் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமையால் , பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் இன்றி வழக்கை முடிவுருத்தி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 8.1 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொஹமட் சித்திக் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டனர். மொஹமட் சித்திக் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதித்தூய்தாக்கல் ஆகியன தொடர்பில் அவருக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.