நவாஸ் ஷெரீப்பிற்கு 12 மணி நேரத்திற்கு விடுதலை

மனைவியின் இறுதிக்கிரியையில் பங்கேற்பதற்காக 12 மணி நேர விடுவிப்பில் நவாஸ் ஷெரீப்

by Staff Writer 12-09-2018 | 12:19 PM
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில், தனது மனைவியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதற்காக நவாஷ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் உள்ளிட்டோர் 12 மணித்தியால பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நவாஷ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப், சிகிச்சை பலனின்றி நேற்று (11) லண்டனில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் லாகூருக்கு கொண்டுவரப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன. ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதமர் நவாஷ் ஷெரீப் உள்ளிட்டோர் ராவல்பின்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவரது மனைவியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக ஷெரீப் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை 5 நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு நவாஸின் சகோதர் ஷஹ்பாஸ் ஷெரீப் (Shahbaz Sharif) பஞ்சாப் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன், அவர்கள் 12 மணித்தியால அவர்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.