செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 12-09-2018 | 6:28 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வியட்நாமிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டுப் பிரதமர் Nguyen Xuan Phuc-ஐ நேற்று சந்தித்தார். 02. கோவில்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் வகையிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். 03. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஸ, புதுடில்லி நகரை வந்தடைந்தார். அவர் 12 ஆவது இந்திய – இலங்கை உறவுகள் மற்றம் எதிர்கால நோக்கு தொடர்பிலான பகிரங்க கூட்டத்தில் உரையாற்றவுள்ளார் என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கலாநிதி சுப்ரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார். 04. உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரையில் மீள கையளிக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. 05. நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. 06. ஒழுக்காற்று விதிகளை மீறும் பல்கலைக்கழக மாணவர்களின் மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 07. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக, நேற்று முன்தினம் (10) நள்ளிரவு முதல். பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் – கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணித்த பஸ் ஒன்று மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 02. அமெரிக்கர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 03. நைஜீரியாவின் நசராவா மாகாணத்தில் நேற்று (10), எரிபொருள் தாங்கி ஒன்று வெடித்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 02. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், எதிர்வரும் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.