மண்சரிவால் தேசியநெடுஞ்சாலை போக்குவரத்தில் பாதிப்பு

இந்தியாவில் ஏற்பட்ட மண்சரிவால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு பாதிப்பு

by Staff Writer 12-09-2018 | 8:19 AM
கிழக்கிந்தியாவின் டார்ஜிலிங் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால், அந்நாட்டு தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 92 கிலோமீற்றர் தூரமான பாதை தடைப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்திற்கான பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் கிராமப்புறங்களில் 1.25 பில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பருவமழைக்கால விவசாயத்தில் தங்கியுள்ளனர். இருப்பினும், அதிகப்படியான மழை வெள்ளம், மண்சரிவுகள், நோய்கள் போன்ற பல பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படுகின்றது.