திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 11-09-2018 | 5:53 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தேசிய பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 02. கிங் – நில்வளா அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 03. சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சின் விசாரணைப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 04. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆவது கூட்டத்தொடர் நேற்று (10) ஜெனீவாவில் ஆரம்பமாகியது. 05. அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக உரிமை அனுசரணைக்காக வௌிநாட்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை தனிப்பட்ட ஒருவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிட எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். 02. அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் தொடரில் ஜூவான் மார்ட்டினைத் தோற்கடித்து நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க கிண்ணத்தை சுவீகரித்துள்ளார்.