தவணைக் கட்டணங்களுக்கு பதிலாக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது

தவணைக் கட்டணங்களுக்கு பதிலாக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது

தவணைக் கட்டணங்களுக்கு பதிலாக பாலியல் சலுகைகளை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2018 | 1:44 pm

Colombo (News 1st) நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் வௌிநாட்டுக் கடனின் தாக்கங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் ஜூவான் பப்லோ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டிற்கு 9 நாட்கள் விஜயம் மேற்கொண்ட அவர் இன்று (11) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், நுண்கடன் நிறுவனங்களின் இலக்காகவிருப்பதைத் தாம் அவதானித்தாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நுண்கடன் நிறுவனங்கள், தாம் வழங்கும் கடன்களுக்கு 220 வீத வட்டியை அறவிடுவதாகவும் ஜூவான் பப்லோ தெரிவித்துள்ளார்.

சில நுண்கடன் சேகரிப்பாளர்கள் தவணைக் கட்டணங்களுக்கு பதிலாக தமக்கு பாலியல் சலுகைகளை வழங்க வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ள விடயம் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒரு சிலர் சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு முயன்றுள்ள சந்தர்ப்பங்கள் குறித்தும் தாம் அறிந்துள்ளதாக ஜூவான் பப்லோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வலுவான ஒழுங்குவிதிகளை நிறைவேற்றி இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தாம் அரசாங்கத்திடம் வலிந்து கேட்டுக்கொள்வதாகவும் ஜூவான் பப்லோ தெரிவித்துள்ளதாக ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
conta[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்