by Staff Writer 10-09-2018 | 3:51 PM
Colombo (News 1st) கண்டி - பொல்கொல்ல பகுதியின் சில இடங்களில் நாளை மறுதினம் (12) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பொல்கொல்ல நீர்வழங்கல் திட்டத்துடன் இணைந்த நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்துக்கு புதிய நீர்ப்பம்பி மற்றும் மின்னணு சாதனங்களை பொருத்தும் நடவடிக்கையின் முதற்கட்டம் இடம்பெறுவதால், அமுனுகம வீதி, 606 ஆம் இலக்க வீதி, லேவெல்ல, பாபர்வத்த, சிறிமல்வத்த, மடவல வீதி, பல்லேகுன்னேபான, கங்கை வீதி, தெகல்தொருவ விகாரை வீதி ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
புதிய நீர்ப்பம்பி மற்றும் மின்னணு சாதனங்களைப் பொருத்தும் நடவடிக்கை இரு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.