சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் குறித்து விசாரணையை முன்னெடுக்குமாறு ஆலோசனை

சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் குறித்து விசாரணையை முன்னெடுக்குமாறு ஆலோசனை

சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் குறித்து விசாரணையை முன்னெடுக்குமாறு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2018 | 5:09 pm

Colombo (News 1st) சுகாதார சேவையில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சின் விசாரணைப்பிரிவு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணைப்பிரிவின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு முறையற்ற நடவடிக்கைகள், கடமை நேரத்தில் தனியார் வைத்திய நடவடிக்கைகளை முன்னெடுத்தல், கண் வில்லைகளை இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரகசியமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாகாண வைத்தியசாலைகளிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்