கிங் – நில்வளா அபிவிருத்தியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்து மீண்டும் விசாரணை

கிங் – நில்வளா அபிவிருத்தியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்து மீண்டும் விசாரணை

கிங் – நில்வளா அபிவிருத்தியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்து மீண்டும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2018 | 6:22 pm

Colombo (News 1st) கிங் – நில்வளா அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை – மாகம்புர ருஹூனு சர்வதேச கேட்போர் கூடத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கிங் – நில்வளா அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நிலவும் தாமதம் மற்றும் மந்தகதி போன்றவற்றை கவனத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்