ஐ.நா வின் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐ.நா வின் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐ.நா வின் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2018 | 2:22 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆவது கூட்டத்தொடர் இன்று (10) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இந்தக் கூட்டத்தொடர் இன்று முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய முதலாவது அமர்வில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பசேல் ஜெரியா உரைநிகழ்த்தவுள்ளார்.

இந்தத் தடவை கூட்டத்தொடரில் இலங்கை குறித்த 2 அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.

அத்துடன், இலங்கை தொடர்பில் 4 உப குழுக் கூட்டங்களும் ஜெனீவா பேரவை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை குறித்த தடுத்துவைத்தல் தொடர்பிலான ஐ.நா. விசேட நிபுணர்களின் அறிக்கை ஏற்கனவே வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன் உண்மை, நீதி, இழப்பூடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஐ.நாவின் விசேட நிபுணர்களின் அறிக்கையும் இம்முறை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற 30 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்