இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2018 | 4:01 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் இங்கிலாந்து அணியுடனான போட்டி ஔிப்பரப்பு உரிமையுடன் தொடர்புபட்ட சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை கிரிக்கெட் நிறுவனத்தன் நிதிப் பிரிவின் தலைமை அதிகாரி ஒருவரின் தனிப்பிட்ட வௌிநாட்டு கணக்கொன்றில் வைப்பிலிடுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக கிரிக்கெட் நிறுவனத்தின் உள்ளக தகவல்கள தெரிவிக்கின்றன.

போட்டி ஔிப்பரப்பை மேற்கொள்ளும் நிறுவனம் இது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வாவிடம் தகவல்களை கோரியுள்ளது.

இதன்போது உடனடியாக செயற்பட்டுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி இந்த கொடுக்கல் வாங்கலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்