ஓய்வூதியம் பெறும் வயதை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு

ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறும் வயதை அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

by Staff Writer 09-09-2018 | 8:33 PM
ரஷ்யாவில் ஓய்வூதியம் பெறும் வயதை அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரஷ்யாவில் 80 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ஆண்கள் ஓய்வூதியம் பெறும் வயது 60 இலிருந்து 65 ஆகவும் பெண்கள் ஓய்வூதியம் பெறும் வயது 55 இலிருந்து 60 ஆகவும் உயர்த்தி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ரஷ்யாவில் ஆண்களின் ஆயுட்காலம் 66 வருடங்களாகவும் பெண்களின் ஆயுட்காலம் 77 வருடங்கள் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஓய்வூதியம் பெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னனெடுக்க ரஷ்ய சிரேஷ்ட அரசியல் தலைவரான நவால்னி தீர்மானித்தார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தை நிறுத்தும் நோக்குடன் அந்நாட்டு நீதிமன்றத்தால் நவால்னிக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவில் இன்று நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.