ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி சம்பியன்

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி சம்பியன்

by Staff Writer 09-09-2018 | 3:11 PM
ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி சம்பியனானது. இதற்கான இறுதிப்போட்டியில் இலங்கை அணி மலேஷிய அணியை 69 - 50 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போட்டியின் முதல் கால்மணி 16 - 16 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையடைந்தது. இரண்டாம் கால்மணியில் அபாரமாக விளையாடிய இலங்கை வீராங்கனைகள், அந்த கால்மணியை 16 - 10 என்ற கோல் கணக்கில் தனதாக்கினார்கள். மூன்றாம் கால்மணியும் 18 - 12 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வசமானது. இந்தநிலையில், இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இந்த வெற்றியுடன் ஆசிய வலைப்பந்தாட்டத்தொடரில் இலங்கை அணி 5 தடவைகள் சம்பியனாகியுள்ளமை சிறப்பம்சமாகும்.