வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 08-09-2018 | 6:39 AM
COLOMBO (News 1st): உள்நாட்டுச் செய்திகள் 01. இந்திய – இலங்கை கூட்டு போர் பயிற்சி நேற்று (07) திருகோணமலையில் ஆரம்பமானது. 02. பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்யுமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 03. அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பொலிஸ் மா அதிபருக்கு,  செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். 04. திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீலாப்பொல மகாவலி கங்கையை அண்மித்த மணல் ஏற்றும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 35 படகுகளில் தீ வைக்கப்பட்டுள்ளது. 05. மட்டக்களப்பு - புல்லுமலை பகுதியில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (07) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வௌிநாட்டுச் செய்திகள் 01. பிரேஸில் ஜனாதிபதி வேட்பாளர் ஜேர் பொல்சொனேரோ (Jair Bolsonaro) மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 02. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அமெரிக்கத் தூதுவராக எலய்னா பீ. டெப்லிட்ஸை (Alaina B. Teplitz) நியமிப்பதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது. விளையாட்டுச் செய்தி 01. ஆசிய வலைப்பந்தாட்டத்தில் சம்பியனாகி, உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு என நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்