இலங்கையின் உயரமான மனிதரை உங்களுக்குத் தெரியுமா?

இலங்கையின் உயரமான மனிதரை உங்களுக்குத் தெரியுமா?

by Bella Dalima 08-09-2018 | 8:14 PM
Colombo (News 1st)  துருக்கியைச் சேர்ந்த Sultan Kosen உலகின் உயர்ந்த மனிதராகத் திகழ்கிறார். இவரின் உயரம் 8 அடி 3 அங்குலமாகும். இந்தியாவின் உயரமான மனிதராக தர்மேந்திரா சிங் காணப்படுகிறார். இவரின் உயரம் 8 அடி 1 அங்குலம். சீனாவைச் சேர்ந்த ஒருவர் 7 அடி 9 அங்குலத்தில் உள்ளார். இலங்கையின் உயர்ந்த மனிதராக குணசிங்கம் கஜேந்திரன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் உயரம் 7 அடி 2 அங்குலமாகும். குணசிங்கம் கஜேந்திரன் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியில் வாழ்ந்து வருகிறார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான குணசிங்கம் கஜேந்திரன், தற்போது சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 1979ஆம் ஆண்டு பிறந்த கஜேந்திரனின் இந்த உயரம் அவருக்கு பல விடயங்களை இலகுவாக்கியுள்ளது. எனினும், உயரம் காரணமாக சில அசௌகரியங்களையும் எதிர்நோக்குவதாக கஜேந்திரன் குறிப்பிட்டார். கஜேந்திரன் பல வருடங்களுக்கு முன்னரே திருமண பந்தத்தில் இணைந்துகொண்டாலும், அண்மையில் நடைபெற்ற நடமாடும் சேவையொன்றின் போதே தனது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டார். முன்னதாக, உலகின் மிக உயரமான மனிதர் என அமெரிக்காவைச் சேர்ந்த Robert Pershing Wadlow அறியப்பட்டார். 8' 11.1'' உயரமான இவரின் நிறை 220 கிலோகிராமாகக் காணப்பட்டது. 1918 ஆம் ஆண்டு பிறந்த Robert Pershing Wadlow தமது 22 ஆவது வயதில் 1940 ஆம் ஆண்டில் உயிரிழந்தார். காலில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது.