by Staff Writer 08-09-2018 | 2:18 PM
COLOMBO (News 1st) ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதற்கான அரையிறுதிப்போட்டியில் ஹொங்கொங் அணியை 55 - 46 எனும் கோல் கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டி நாளை (09) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.