ஓரினச்சேர்க்கை குற்றமில்லை: இந்திய உச்ச நீதிமன்றம்

ஓரினச்சேர்க்கை குற்றமில்லை: இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

by Bella Dalima 06-09-2018 | 5:21 PM
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவை இரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை இரத்து செய்யக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அக்டோபர் 2017ஆம் திகதி வரையிலான தகவலின்படி , நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரித்தானியா, லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமானதாக்கப்பட்டுள்ளது.