உள்நாட்டுக் கிழங்கு அறுவடை சதொச ஊடாக கொள்வனவு 

உள்நாட்டுக் கிழங்கு அறுவடையை சதொச ஊடாக கொள்வனவு செய்ய தீர்மானம்

by Staff Writer 06-09-2018 | 9:36 PM
Colombo (News 1st)  விவசாயிகளின் உள்நாட்டுக் கிழங்கு அறுவடையை சதொச ஊடாக நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், லங்கா சதொச பெறுகை உத்தியோகத்தர்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் கிழங்கினை கிலோ 90 ரூபாவிற்கும், விவசாயிகளால் லங்கா சதொசவிற்கு கொண்டு வந்து கொடுக்கப்படும் கிழங்கினை 100 ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, இவ்வாறு பெறப்படும் கிழங்கு ஒரு கிலோ லங்கா சதொசவினால் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விடயத்தை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு நேற்று (05) அறிவித்தது.