by Staff Writer 06-09-2018 | 7:18 PM
Colombo (News 1st) 11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்டத்தின் இரண்டாம் சுற்றில் இலங்கை தனது கடைசிப் போட்டியில் இன்று ஹாங்காங்கை எதிர்கொண்டது.
போட்டியில் அபாரமாக விளையாடிய இலங்கை அணி முதல் கால் மணியை 18 -13 எனும் கோல் கணக்கில் கைப்பற்றியது.
தொடர்ந்து இரண்டாம் கால் மணியில் 21-12 எனும் கோல் கணக்கிலும், மூன்றாம் கால் மணியில் 15-10 எனும் கோல் கணக்கிலும் இலங்கை முன்னிலை பெற்றது.
நான்காவது கால்மணியை 17 -13 என தனதாக்கிய இலங்கை அணி போட்டியில் 71-48 எனும் பாரிய கோல் வித்தியாசத்தில் வெற்றிவாகைசூடியது.
இந்த வெற்றியுடன் கிண்ணத்திற்கான ஈ குழுவில் முதலிடம் பெற்ற இலங்கை நாளை மறுதினம் (08) சிங்கப்பூருடன் அரை இறுதியில் மோதவுள்ளது.
இலங்கை அணி லீக் சுற்றிலும், இரண்டாம் சுற்றிலும் தாம் விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது.