ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2018 | 3:48 pm

Colombo (News 1st) ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று (05) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஹட்டன் – தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், பிரதேச அரசியல்வாதியொருவரின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உணவு விஷமடைந்ததன் காரணமாக பேரணியில் கலந்து கொண்ட சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 25 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதுடன், 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்