ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியால் கொழும்பின் இயல்பு நிலை பாதிப்பு
by Bella Dalima 05-09-2018 | 8:24 PM
Colombo (News 1st) ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்திருந்த ''மக்கள் பலம் கொழும்பிற்கு'' எனும் எதிர்ப்புப் பேரணி இன்று கோட்டை - லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.
பேரணி இடம்பெறும் பகுதி இன்று மதியம் வரை அறிவிக்கப்படாத நிலையில், காலையில் இருந்தே கொழும்பு வீதிகளில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் வருகை இன்று குறைவாகக் காணப்பட்டதுடன், பல அலுவலக ஊழியர்கள் இன்று மதிய வேளையிலேயே கொழும்பில் இருந்து வெளியேறிவிட்டனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் விதம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அறிவித்தனர்.
காலி வீதி, கொழும்பு, நகர மண்டபம், மருதானை, மாளிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து குழுக்களாக வந்தவர்கள் புறக்கோட்டையில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரை பேரணியாகச் சென்றனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று முற்பகல் முதல் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொள்ளுப்பிட்டியில் இருந்து காலி வீதி, டெக்னிக்கல் சந்தி போன்ற கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
பாராளுமன்ற வளாகம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், அலரி மாளிகை மற்றும் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதி என்பவற்றில் இன்று மதியம் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் பேரணியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த கருத்துக்கள்
பசில் ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவின் பலத்தை நாமல் ராஜபக்ஸவிற்கு வழங்கவே இந்த முயற்சி: விஜித் விஜயமுனி சொய்சா
மதுபானத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் ஆட்சியை மாற்ற முடியாது - சஜித் பிரேமதாச