ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியால் கடும் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியால் கடும் வாகன நெரிசல்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புப் பேரணியால் கடும் வாகன நெரிசல்

எழுத்தாளர் Bella Dalima

05 Sep, 2018 | 3:51 pm

Colombo (News 1st)  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு டெக்னிக்கல் சந்தியிலிருந்து பெரளை வரையிலான பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாக அங்குள்ள நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

டி.எம். விஜேவர்தன மாவத்தை, லோட்டஸ் வீதி, டாலி வீதி மற்றும் இப்பன்வெல உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுகின்றது.

”மக்கள் பலம் கொழும்பிற்கு” எனும் தொனிப்பொருளில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்த எதிர்பு பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டி முதல் காலி முகத்திடல் வரை, கனரக வாகனங்கள் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்