சென்னையில் அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பெட்ரோல், டீசல் விலை

by Bella Dalima 04-09-2018 | 4:09 PM
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று மேலும் உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையின் மசகு எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்தே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவில் உயர்வடைந்து செல்கிறது. இந்நிலையில், நேற்று (03)பெட்ரோலின் விலை ஒரே நாளில் 32 சதத்தினால் உயர்வடைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் 81 ரூபா 92 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று 82 ரூபா 24 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, நேற்று முன்தினம் 74 ரூபா 77 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் நேற்று 42 சதங்களால் அதிகரித்து 75 ரூபா 19 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபா 41 சதத்திற்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் சென்னையில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.