இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை

இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை

இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை

எழுத்தாளர் Bella Dalima

04 Sep, 2018 | 5:47 pm

Colombo (News 1st)  இங்கிலாந்து அணியின் இலங்கை கிரிக்கெட் விஜயத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி எதிர்வரும் ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 சர்வதேச ஒருநாள், ஒரு சர்வதேச இருபதுக்கு 20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஒக்டோபர் 5, 6 ஆம் திகதிகளில் இங்கிலாந்து பங்கேற்கும் பயிற்சி ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் முதல் போட்டி ஒக்டோபர் 10 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 13 ஆம் திகதியும் தம்புளையில் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் 17, ஒக்டோபர் 20 ஆம் திகதிகளில் மூன்றாம், நான்காம் சர்வதேச ஒருநாள் போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

ஐந்தாவதும், இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி ஒக்டோபர் 23 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டி ஒக்டோபர் 27 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, இரண்டு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சிப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதுடன், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 6 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி பல்லேகலயிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்