18வது ஆசிய விளையாட்டு விழா நிறைவு

18வது ஆசிய விளையாட்டு விழா நிறைவு

by Staff Writer 02-09-2018 | 9:57 PM

சீனாவின் ஆக்கிரமிப்புடன் 18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இனிதே நிறைவுக்குவந்தது.

ஆசியாவின் பலம் என்பதை தொனிப்பொருளாகக் கொண்டு 18 ஆவது ஆசிய விளையாட்டு விழா இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் 15 நாட்களுக்கு முன்னர் ஆரம்பமானது. 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் இந்தமுறை களமிறங்கினர். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீனா 135 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் அடங்கலாக 289 பதக்கங்களை சுவீகரித்த முதலிடத்தை முன்னிலை வகித்தது. 75 தங்கப்பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாமிடத்தையும், 49 தங்கப் பதக்கங்களுடன் தென்கொரியா மூன்றாமிடத்தையும் பிடித்தன. விளையாட்டு விழாவை ஏற்று நடத்திய இந்தோனேஷியா 31 தங்கப்பதக்கங்களுடன் நான்காமிடத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா 15 தங்கம் உட்பட 69 பதக்கங்களை வென்று எட்டாமிடத்தை அடைந்தது. இலங்கை சார்பாக 172 வீர, வீராங்கனைகள் போட்டியிட்ட போதிலும் ஒரு பதக்கத்தையேனும் வெல்ல முடியவில்லை. இறுதி நாள் நிகழ்வுகள் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக்கின் பங்களிப்புடன் களைகட்டியது. அடுத்த ஆசிய விளையாட்டு விழா 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது. அதற்கான அங்கீராமாக உத்தியோகப்பூர்வ கொடி சீனாவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து கலை நிகழ்சிகள் அரங்கேறின.