எம்மை விரட்டியதால்  மொட்டு  உருவானது – முன்னாள் ஜனாதிபதி

எம்மை விரட்டியதால் மொட்டு உருவானது – முன்னாள் ஜனாதிபதி

எம்மை விரட்டியதால் மொட்டு உருவானது – முன்னாள் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2018 | 9:55 pm

எம்மை கட்சியில் இருந்து விரட்டி கட்சிக்கு நாம் தேவையில்லை என்று கூறினர். அதனாலே தாமரை மொட்டு உருவாகியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67 ஆவது வருடப் பூர்த்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

 

இன்று போல் ஒரு நாளில்தான் நாம் அனைவரும் நேசித்த எமது தந்தை பண்டாரநாயக்க முன்நின்று உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

நாம் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். எமது காலத்திலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமான அரசாங்கமொன்றை உருவாக்கியது. அவ்வாறான நிலமையிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதிய தலைமைத்துவத்திற்கு ஒப்படைத்தோம். எனினும் எம்மை கட்சியில் இருந்து விரட்டி கட்சிக்கு நாம் தேவையில்லை என்று கூறினர். அதனாலே தாமரை மொட்டு உருவாகியது,என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்