அகவை 67இல் தடம் பதித்த ஶ்ரீலசுக

அகவை 67இல் தடம் பதித்த ஶ்ரீலசுக

அகவை 67இல் தடம் பதித்த ஶ்ரீலசுக

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2018 | 9:49 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 67ஆவது வருட பூர்த்தியை இன்று கொண்டாடுகின்றது.

சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து, கட்சியின் வருட பூர்த்தி கொண்டாடப்பட்டது.

களனி ரஜமகா விகாரையில் இன்று மாலை நடைபெற்ற சமய வழிபாடுகளில், கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பம்பலப்பட்டி ஶ்ரீ கதிரேசன் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற பூஜைகளிலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கொழும்பு கெத்தாராம ஜூம்மா பள்ளிவாசலில் இன்று துஆப் பிராத்தனைகள் இடம்பெற்றதுடன், நாளைய தினம் வென்னப்புவவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.

1952ஆம் ஆண்டில் இன்று போன்றதொரு நாளில் முன்னாள் பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கவினால் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் 1956இல் ஆட்சிக்கு வந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திரத்தின் பின்னர் பல தலைவர்களை உருவாக்கிய கட்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்