வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 01-09-2018 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இலங்கை மத்திய வங்கி மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்வதற்கு உதவி புரிந்தமைக்காக வழங்கப்பட்டுள்ள தண்டனையை திருத்தத்திற்கு உட்படுத்துமாறு கோரி, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக செயற்பட்ட  குற்றவாளிகள் மூவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 02. முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக, விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்  கே. இன்பராசா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை முஸ்லிம் கவுன்ஸில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 03. காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை இடம்பெறும்போது அவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 04. மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். 05. BIMSTEC மாநாட்டின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். 06. யாழ். அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி நேற்று (31) விடுவிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில்,பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 02. உலக வர்த்தக அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். விளையாட்டுச் செய்தி 01. தென் கொரியாவில் நடைபெற்ற கரம் உலக சம்பியன்ஷிப்பின் ஆடவருக்கான அணிப் பிரிவில் கரம் உலக சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி நேற்று (31) நாடு திரும்பியது.