அதிசக்தி தொலைநோக்கி உருவாகி வருகிறது

பல மடங்கு துல்லியமான அதிசக்திவாய்ந்த தொலைநோக்கி உருவாகி வருகிறது

by Bella Dalima 01-09-2018 | 6:49 PM
பல மடங்கு துல்லியமாகக் காண்பிக்கக்கூடிய அதி நவீன தொலைநோக்கி ஒன்று சிலி நாட்டில் உருவாகி வருகிறது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த Giant Magellan Telescope 2024 ஆம் ஆண்டு முதல் செயற்படத் தொடங்கும் என கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என விண்ணியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சிலி மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இந்த ஒரு பில்லியன் டொலர் செயற்திட்டத்திற்கான அடிப்படைப் பணிகளை சமீபத்தில் ஆரம்பித்தனர். புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, தொழிலாளர்கள் பாறைப் படுகையில் 23 அடி துளைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவை காங்கிரீட்டினால் நிரப்பப்பட்டு, தொலைநோக்கிக்குத் தேவையான ஆதாரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதி, பூமியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று. எனவே, வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தைக் கவனிக்க முடியும் என நம்பப்படுகிறது.