பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு: பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கத் தீர்மானம்

by Staff Writer 01-09-2018 | 12:07 PM
Colombo (News 1st) கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து பேக்கரி உற்பத்திகளினதும் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலுக்கு சங்கத்தின் நிறைவேற்று குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் ப்ரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 95 ரூபாவாக காணப்பட்ட கோதுமை மாவின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி திருத்தம் மற்றும் ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்தமையை கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.