முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களில் கைது

முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களில் கைது

முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களில் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2018 | 4:25 pm

Colombo (News 1st)  முப்படையிலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 10,626 பேர் கடந்த 10 மாதங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளின் அதிகாரிகளாகப் பணியாற்றிய 28 பேர் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

இவர்களில் 8805 இராணுவத்தினரும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்ட படையினர் சட்டரீதியாக பணி விலகல் ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்