போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகையை சுட்டுக்கொன்ற பொலிசார்

போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகையை சுட்டுக்கொன்ற பொலிசார்

போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகையை சுட்டுக்கொன்ற பொலிசார்

எழுத்தாளர் Bella Dalima

01 Sep, 2018 | 5:21 pm

போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நடிகையை நிஜத்துப்பாக்கி என நினைத்து பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹொலிவுட்டில் பிரபலமானவர் நடிகை வெனஸா மார்குயஷ் (Vanessa Marquez)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேசடினாவில் வசித்து வந்த இவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், சமீபகாலமாக மனநிலை பாதிப்பிற்குள்ளாகி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவரது வீட்டு உரிமையாளர் சம்பவத்தன்று பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்து, வெனஸா தம்மை சுட்டு விடுவதாக மிரட்டுகிறார் என முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்ட வெனஸா, தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி பொலிசாரையும் மிரட்டியுள்ளார்.

இதனால் தற்காப்பு நடவடிக்கையாக நடிகையை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி சோதித்துப் பார்த்ததில் அது போலியானது என தெரிய வந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்