கரம் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு வருகை

கரம் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு வருகை

கரம் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

01 Sep, 2018 | 8:10 pm

Colombo (News 1st)  கரம் உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி இன்றைய தினம் நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு வருகை தந்தது.

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கரம் போட்டிகளில் பங்கேற்று, இலங்கையின் புகழை உலகறியச் செய்த கரம் அணியினர் நியூஸ்ஃபெஸ்ட் அங்கத்தவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

உலகக் கிண்ண கரம் போட்டிகளில் இலங்கை ஆடவர் அணி சாம்பியனானது.

சமில் குரே தலைமையிலான இலங்கை அணியில் நிஷாந்த பெர்னாண்டோ, மொஹமட் ஷஹீட், உதேஷ் ஷஷிக ஆகியோர் இடம்பெற்றனர்.

இலங்கை மகளிர் அணி இரண்டாமிடத்தைப் பெற்றதுடன், யஷிகா ராஹூபத்த தலைமை வகித்த இந்த அணியில் ஜோசப் ரொஷீட்டா, சலனி லியனகே, மதுஷா ராமநாயக்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்