BIMSTEC  தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால நியமனம்

BIMSTEC மாநாட்டின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனம்

by Staff Writer 31-08-2018 | 4:02 PM
Colombo (News 1st)  BIMSTEC மாநாட்டின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட 4 ஆவது BIMSTEC மாநாடு நேபாளம் - காத்மண்டுவில் நடைபெற்று வருகின்றது. இலங்கை , இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இதேவேளை, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேணடும் என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அதிகரித்து வருகின்ற வறுமை காரணமாக பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளதுடன், அந்த சவால்களைத் தீர்ப்பதற்கு வலய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்த நாடுகளின் பங்களிப்பினால் அமைக்கப்பட்டுள்ள BIMSTEC அமைப்பு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.