ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் காலவரையறையின்றி மூடல்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் காலவரையறையின்றி மூடல்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் காலவரையறையின்றி மூடல்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2018 | 3:42 pm

Colombo (News 1st) நிலவும் வரட்சியுடனான வானிலையால் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சைகளை பிற்போடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்தார்.

நிலவும் வரட்சியினால் பல்கலைக்கழக விடுதிகளுக்கு நீர் விநியோகிப்பதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அம்மை நோய் பரவுவதால் கடந்த 8 ஆம் திகதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டன.

பரீட்சைகளுக்காக செப்டம்பர் 3 ஆம் திகதி பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், காலவரையறையின்றி மூடுவதற்கு இன்று மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்