மஹபொல நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிடத் தீர்மானம்

மஹபொல நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிடத் தீர்மானம்

மஹபொல நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிடத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2018 | 3:50 pm

Colombo (News 1st) மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நிதியமாகப் பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை பொதுச்சொத்துகள் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது இரண்டு நிறுவனங்களின் கீழ் முதலீடு செய்யப்படும் மஹபொல புலமைப்பரிசில் நிதியத்தை இரத்து செய்து, அரச வங்கியொன்றில் அதனை முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த நிறுவனங்களில் முதலீடு செய்தமையால் 2500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்