உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென ட்ரம்ப் மிரட்டல்

உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென ட்ரம்ப் மிரட்டல்

உலக வர்த்தக அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுமென ட்ரம்ப் மிரட்டல்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2018 | 5:53 pm

உலக வர்த்தக அமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் அதிலிருந்து அமெரிக்கா விலகும் என ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது,

ஒருவேளை உலக வர்த்தக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்றால் அமெரிக்கா வெளியேறிவிடும். இதுவரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் மோசமான ஒப்பந்தம் இதுவாகும்

என விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் இருந்தே உலக வர்த்தக அமைப்பை கடுமையாக எதிர்த்து வந்தார். மேலும், அவ்வமைப்பு அமெரிக்காவுக்கு நியாயம் காட்டவில்லை எனவும் விமர்சித்துவந்தார்.

உலக வர்த்தக அமைப்பு தங்கள் நாட்டின் இறைமையில் தலையிடுவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ரொபர்ட் லிதிரைசர் கூறியிருந்தார்.

உலக வர்த்தக அமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக கொள்கை ரீதியாக ஏற்பட்ட முரண்பாட்டால் பனிப்போர் நிலவி வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்