இலங்கை மின்சார சபைக்கு 49 பில்லியன் ரூபா நட்டம்: பாரிய இலாபத்தைப் பெறும் West Coast

இலங்கை மின்சார சபைக்கு 49 பில்லியன் ரூபா நட்டம்: பாரிய இலாபத்தைப் பெறும் West Coast

இலங்கை மின்சார சபைக்கு 49 பில்லியன் ரூபா நட்டம்: பாரிய இலாபத்தைப் பெறும் West Coast

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2018 | 10:31 pm

Colombo (News 1st)  இலங்கை மின்சார சபை தற்போது 49 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளமை தெரிய வந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கீழ் LTL என்ற நிறுவனம் இயங்குவதுடன், அதன் கீழ் West Coast என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இவ்வாறு தனியார் நிறுவன முதலீட்டில் இலங்கை மின்சார சபை இயங்கி வரும் சூழலில், West Coast நிறுவனம் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனமாகப் பதிவாகியுள்ளது.

அதாவது, சுமார் 4 வீத பங்குகளை மாத்திரம் கொண்டுள்ள West Coast நிறுவனமானது 9.5 பில்லியன் ரூபா இலாபத்தைப் பெறுவதுடன் வருடத்திற்கு 600 மில்லியன் ரூபா வருமான வரியையும் பெறுகின்றது.

எனினும், West Coast இன் 4 வீத பங்குகளைத் தவிர்த்து, ஏனைய 96 வீத பங்குகள் இலங்கை அரசாங்கத்தின் கீழ் செயற்படும் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

என்றாலும் கூட இந்த 96 வீத பங்குகளைக் கொண்ட அரச நிறுவனங்கள் நட்டத்தை எதிர்கொள்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்