புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 30-08-2018 | 5:56 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. கண்டி – கலஹா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் (28) ஏற்பட்ட அமைதியின்மைக்குக் காரணமான குழந்தையின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 02. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்பினை வௌியிட்டுள்ளனர் . 03. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸூயுகி நகானே (Kazuyuki Nakane), பதில் வௌிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவை சந்தித்தார். 04. மக்களுக்கு வீடுகளே முக்கியம், அவற்றை நிர்மாணித்துக் கொடுக்கும் நாடுகள் எவை என்பது முக்கியமில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டார். 05. பெரும்பாலான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடும் செயற்பாடுகள் இம்முறை தனியார் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 06. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று (29) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்தனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் குறித்து இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஐ.நா வின் அறிக்கையை மியன்மார் நிராகரித்துள்ளது. 02. பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றில், மோட்டார் சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் இருவர் பலியாகியதோடு, 37 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.