இலங்கை தொழிலாளர்காங்கிரஸின் பொதுச்செயலாளர் நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக அனுஷியா சிவராஜா நியமனம்

by Staff Writer 30-08-2018 | 11:27 AM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் உடன் அமுலுக்குவரும் வகையில் அனுஷியா சிவராஜாவிற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகர், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட தீர்மானத்திற்கமைய இந்தப் பதவி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். அனுஷியா சிவராஜா இதுவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் அணிப் பிரிவின் தலைவியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.