மைக்கல் ஜாக்சனின் பிறந்த நாள்: கிரீட சிலை முன் ஆடி ஆர்ப்பரித்த ரசிகர்கள்

மைக்கல் ஜாக்சனின் பிறந்த நாள்: கிரீட சிலை முன் ஆடி ஆர்ப்பரித்த ரசிகர்கள்

மைக்கல் ஜாக்சனின் பிறந்த நாள்: கிரீட சிலை முன் ஆடி ஆர்ப்பரித்த ரசிகர்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2018 | 4:28 pm

பாப் இசை மன்னர் மைக்கல் ஜாக்சனின் 60 ஆவது பிறந்த நாளை (29) முன்னிட்டு லண்டனில் அவரது ரசிகர்கள் ஒன்றிணைந்து, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் மைக்கல் ஜாக்சனின் பெயர் பொறிக்கப்பட்ட தற்காலிக கிரீட வடிவ சிலையை சோனி நிறுவனம் வடிவமைத்திருந்தது.

இந்த சிலையின் முன் குவிந்த ரசிகர்கள் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது நடன அசைவுகளை ஆடி ஆர்ப்பரித்தனர்.

இந்த கிரீட சிலை அவரது பிறந்தநாளில் தேம்ஸ் நதிக்கரையில் வைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டது.

மைக்கல் ஜாக்சனின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஜப்பான், ஸ்பெயின், மாஸ்கோ போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு மைக்கல் ஜாக்சனின் பாப் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

இதில் பெரும்பாலானோர் அவரின் பிரபலமான நடன அசைவான ‘மூன் வாக்’ செய்து அசத்தினர்.

பாப் இசை மற்றும் தன்னுடைய தனித்துவமான நடன அசைவுகளால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் மைக்கல் ஜாக்சன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்