by Staff Writer 30-08-2018 | 7:08 AM
வங்காள விரிகுடா பிராந்திய நாடுகளின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட 4ஆவது பிம்ஸ்டெக் மாநாடு இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (31) உரை நிகழ்த்தவுள்ளார்.
குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாளம் நோக்கிப் பயணித்த ஜனாதிபதிக்கு, காத்மண்டு விமானநிலையத்தில் வைத்து அந்நாட்டு பிரதிப் பிரதமர் இஸ்வர் பொகஹரினால் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது இருதரப்பினருக்குமிடையில் 2 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.