தேயிலை விலையில் வீழ்ச்சி

தேயிலை விலையில் வீழ்ச்சி

by Staff Writer 29-08-2018 | 10:24 AM
தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாவிற்கும் அதிக விலையில் காணப்பட்ட தேயிலையின் விலை, தற்போது சில பகுதிகளில் 80 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், தாங்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பில் இலங்கை தேயிலை சபையிடம் வினவியபோது, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையே தேயிலை விலை வீழ்ச்சியடைவதற்குக் காரணம் என இலங்கை தேயிலைச் சபையின் ஆணையாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க குறிப்பிட்டார். இந்த பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.