செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 29-08-2018 | 6:37 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தமிழ் மக்களின் பலத்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரசு வடக்கு மாகாணத்தின் எல்லைப் பகுதியில் L வலயம் என்ற பெயரில் பெரும்பான்மையின மக்களின் குடியேற்றத்தை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருவது கவலையளிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 02. நாட்டில், மனித செயற்பாடுகள் காரணமாக 3 நாட்களுக்கு ஒரு யானை வீதம் உயிரிழப்பதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 03. மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை ஆய்வு செய்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (28) நியமிக்கப்பட்டுள்ளது. 04. கண்டி – கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தையொன்று உயிரிழந்ததை அடுத்து, வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. 05. சிறுவர்களுக்கான பாதுகாப்பு நிலையங்களைத் தரமுடையதாக அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. சிரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னரும், அந்நாட்டு ஜனாதிபதி அல்-அஸாத் பதவியில் நீடிப்பது விசித்திரமான பிழையாக இருக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். 02. பாகிஸ்தான் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் அரச மரியாதை இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 03. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுச் செய்தி 01. உலக சம்பியன்ஷிப் க்ளிப் டைவிங் போட்டிகளின் ஐந்தாம் கட்டத்தில் பிரித்தானியாவின் கெரி ஹன்ட் சம்பியனானார்.