விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச

சுமதி தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச

by Staff Writer 29-08-2018 | 10:39 PM
Colombo (News 1st)  23 ஆவது சுமதி தொலைக்காட்சி விருது வழங்கல் விழாவில் நியூஸ்ஃபெஸ்ட் மற்றும் சிரச தொலைக்காட்சி விருதுகளை சுவீகரித்துள்ளன. 23 ஆவது சுமதி தொலைக்காட்சி விருது வழங்கல் விழா கலைஞர்களின் பங்குபற்றலுடன் கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது. விருது வழங்கல் விழாவில் வருடத்தின் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான இரண்டாமிடத்தை நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி வாசிப்பாளர் அமில முனசிங்க பெற்றார். வருடத்தின் சிறந்த செய்தி வாசிப்பாளர் விருதை ஹிரு தொலைக்காட்சியின் அனுருத்த ரத்நாயக்க பெற்றதுடன், மூன்றாமிடம் தேசிய தொலைக்காட்சி வசமானது. 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த இசை நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கான விருதை சிரச தொலைக்காட்சியின் குமுது அபயவீர வெற்றி கொண்டார்.